பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே என்று புறநானூற்றில் நன்கணியார் பாடியிருக்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒரு வீட்டிலே மகிழ்ச்சியும் இன்னொரு வீட்டிலே துயரமும் ஒரு வீட்டிலே நல்ல முரசின் ஒலியும் இன்னொரு வீட்டிலே இழவு முரசின் ஒலியும் கேட்கின்ற இந்த வேறுபாடு நாட்டிலே இருக்கலாமா? இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட வேறுபாட்டை உண்டாக்கியவன், நிலைப்படுத்தியவன் பண்பாளனாக இருக்கமுடியுமா என்று கேட்டு இல்லாமை ஒழிய வேண்டும் என்ற அந்தப் பொதுவுடமைக் கருத்தை இந்தப் புலவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். F பெண்பாற் புலவர்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். சங்க காலத்திய புலவர்களில் அவ்வையார் மிகச் சிறந்த புலவர். அவருடைய பாடல் ஒன்று. பாடலைச் சொன்னால் அது உங்களுக்குப் புரியாது. இருந்தாலும் கூறுகிறேன். வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலா மீது நீட்டிய மண்டை யென் சிறுவனைக் கால் கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே” (புறநானூறு-ஒளவையார்) இந்தப் பாட்டிற்கு என்ன பொருள் என்றால், வெள்ளாட்டு மந்தைபோல பல இளைஞர்கள் மன்னன் பின்னால் போனாலுங்கூட, மன்னன் எல்லோரையும் விட அதிகமாக தேறலை