பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 "வேலிபோட முடியாது இளமைக்கென்று தெரிந்த பின்னும் கேலி பேசும் உன் போக்கு புரியவில்லை' என மறித்து அந்தத் தாய் பேசலானாள்:- "புண்பட்ட என்னகத்தில் புலமைத் தாயே உந்தன் கேலி, பண்பட்ட தமிழ் மருந்தாய் பாய்வதை நான் உணருகின்றேன். கண்கெட்ட கிழவி எந்தன் கரம்தொட்டுக்கும் வணங்கிச் சென்ற காளையை நான் மறக்கவில்லை. மண் முட்டி எழுந்து நிற்கும் மாங்கன்றின் தளிர்தான் மேனி, பொன்கொட்டிக் கொடுத்தாலும் வளையாத மனவலிமை புலிக்குட்டி விளையாடும் அவன் மடியில்! அந்த மகன் ஆசை மகன் அணிவகுத்தான், சொந்த மண்ணின் நலங்காக்கப் பணி வகுத்தான்! முடிக்கவில்லை முதியவளும்; பொறுக்கவில்லை ஔவைக்குக்