பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஆயிரம் பேர் மன்னர்க்குப் பின்னால் இருந்தும் அவர் மட்டும் என் மகன்பால் அளவற்ற அன்புகொண்டார். போர்முனையில் ஓய்வெடுத்துக் கிடக்கும்போது "தேறல்” என்னும் உற்சாகச் சாறுதனைத் திறல்மறவர் அருந்துவதற்குத் திரண்டு நிற்பார். அப்போது மன்னரவர் என் மகனை அருகழைத்து அனைவரினும் அதிக பானம் அளித்து மகிழ்வார். என் வாட்டம் இப்போது கேட்பாயம்மா! என்புகளைத் தெப்பமாக்கி நரி மிதக்கும் போர்க்களத்தில் தலையுருட்டிப் பந்தாடும் பறவையினம்! அத்தலையில் ஒரு தலையாய் என் மகன் தலையும் இருந்தாலன்றோ இறைவனளித்த தேறலுக்கும் பெருமையுண்டு மன்னன் அன்பை மிகையாய்ப் பெற்றான் மண்டையில் தேறலும் அதிகம் பெற்றான் மாண்டனன் போரில்; புகழ் பூண்டனன் எனும் காட்சி காண்டிடல் அரிதோ எனக் கலங்கினேன் அம்மா! தவறா?" என்றாள்.