பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அப்படித்தான் 45ஆம் ஆண்டு ஈரோட்டுப் பெரியாருடைய அலுவலகத்திலே தொண்டனாக இருந்தபோது குடியரசு பத்திரிகையில் துணையாசிரியராக இருந்தபோது எழுதப்பட்டதுதான். இங்கே படித்துக் காட்டினே கடினமான அந்த புறநானூற்றுப் பாடல். தாய் தன்னுடைய மகன் போர்க்களத்தில் முதுகிலே காயம்பட்டான் என்று வருந்தி களத்திலே சென்று அவனைத் தேடி மகிழ்ச்சி அடைந்தாள் என்று இதனை எளிய நடையில் அன்றைக்கு நான் எழுதியதுதான் குடிசைதான் ஒரு புறத்தில் என்ற கவிதை அந்தக் கவிதை குடிசைதான்! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;மிளிரும்! புலியின் குகையினிலே அழகில்லை - புதுமையல்ல! கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் - மறவன் மாளிகை! இல்லத்து வாயிலிலே