பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி. ஓடிவந்தான் ஒரு வீரன் “ஒரு சேதி பாட்டி!" என்றான். ஆடி வந்த சிறுமி போல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண்மகனா நீ தம்பி! மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்; பின், பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர் போன கிழட்டுத் தமிழச்சி! வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி உன் - வாடிக்கைக் கேலியை விட்டுவிடு மடிந்தான் உன் மகன் களத்தில்' என்றான் மனம் 50 50