பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றை மாத்திரம் நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வீரத்தமிழ், அழகுத் தமிழ், நளினத் தமிழ், இன்பத் தமிழ் மாத்திரம் இருந்தால் போதாது. அறிவியல் தமிழும் வேண்டும். அதை வளர்க்கின்ற முயற்சியிலே நாம் மென்மேலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் சாதனைச் செம்மல் டத்தோ சாமிவேலு அவர்கள் இங்கே ஒரு கணினிப் பெட்டியை வழங்கும்போது அறிவியல் துறையிலே தமிழை வளர்க்க இந்த முயற்சி என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதற்காகத்தான் தமிழகத்திலே வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழ் இணையத்தை விரிவாக்க பெருக்கிட ஒரு பெரு முயற்சி செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த வட்டாரத்திற்கு வந்த தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் இதுபற்றி கலந்தாலோசித்திருக்கிறார். இதுகுறித்து நானும் தம்பி முரசொலி மாறனும் கலந்து பேசி ஒரு குழுவை அதற்காக அமைத்து உலகத்தில் இருக்கின்ற பல்வேறு தமிழ் அறிஞர்களையும் அழைப்பதென்றும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற முக்கிய பிரமுகர்களை டத்தோ போன்றவர்களையெல்லாம் அழைத்து தமிழ் இணையம் அறிவியல் தமிழ், தகவல் தொடர்பு தமிழ், இண்டர்நெட்டில் இன்றைக்கு வோர்ல்டு டெல் மூலமாக தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் கணினியைப் பொருத்துவதின் மூலமாக தமிழைப் பரப்புகின்ற முயற்சியில் இன்னும் நான்கைந்து மாதங்களில் ஈடுபடவிருக்கிறோம். மேலும் இந்த ஆண்டு 100 பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடம் சொல்லித் தரவிருக்கிறோம். இந்த அதிவேக முற்போக்கான தகவல் தொடர்பு மற்றும் தமிழ் இணையத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் பிப்ரவரியில் தமிழகத்திலே மாநாடு நடத்தவிருக்கிறோம். 54