பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 சிங்கப்பூர் எழுத்தாளர் சங்க இலக்கிய விழாவில் முதல்வர் கலைஞர் உணர்ச்சிமிகு உரை சிங்கப்பூரில் 4ஆம் தேதி காலையில் வந்து இறங்கிய நான், வணிகத்துறை நண்பர்கள், தொழில் முனைவோர், அவர்கள் சார்ந்துள்ள குழுக்கள் சந்திப்புடன் சிங்கப்பூர் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. மா போ டான் அவர்களையும், தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் இயோ அவர்களையும், சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. கூன் கோக் லூன் அவர்களையும், நேற்று மாலையில் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் மாண்புமிகு கோ சோக் டோங் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். அவர்களிடமெல்லாம் நான் பேசினேன். இப்போது பேசாமல் உங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறது. (கைதட்டல்) அந்த நிலையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். கெழுதகை நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல் என்னுடைய அறுபதாண்டு கால பொது வாழ்க்கையில் இந்த சிங்கப்பூருக்கு வரவேண்டும், வரவேண்டும் என்று பலமுறை முயற்சியெடுத்தும் கூட வர இயலாத சூழல் ஏற்பட்டு-கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மாத்திரம் கலந்துகொள்ள ஒரு நாள் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் திரும்பினேன். இப்போது சிங்கப்பூரில் மூன்று நாட்களும், மலேசியாவில் மூன்று நாட்களும் என்று தமிழகத்திற்குத்