பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வாய்ப்பை அளித்தமைக்காக என்னுடைய நன்றியை உங்கள் காலடிகளில் காணிக்கையாக்குகிறேன். நான் உங்களில் ஒருவன். தமிழகத்தில் தஞ்சைத் தரணியில் திருக்குவளை என்கிற ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இங்கே வந்தமர்ந்ததும் மேடையை உற்றுப் பார்த்தேன். அதிலே வைக்கப்பட்டுள்ள பதாகையைக் கவனித்தேன். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் என்று எழுதியிருக்கும் சொற்றொடர்கள் எல்லாம் உங்களுடைய அன்பு எனக்கு வழங்கியது. அந்தச் சொற்றொடரின் தொடர்ச்சியாக இருக்கின்ற கருணாநிதி என்பதுதான் எனக்குச் சொந்தமானது. (கைதட்டல்) மற்ற சொற்கள் எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவை. நீங்கள் வழங்கியது, அந்தப் பாச உணர்வோடு சில கருத்துக்களை இந்த மேடையில் நின்று உங்களோடு பரிமாறிக் கொள்ள நான் விரும்புகிறேன். - இன்று உலகம் விஞ்ஞான யுகத்தில் மிக மிகச் சுருங்கிக் கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் லிங்கன் கொல்லப்பட்டட செய்தி ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் லண்டன் மாநகருக்கே கிட்டியது என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு தகவல் தொடர்பு பஞ்சமாக இருந்த கால கட்டம் அது. ஆனால், இன்றைக்கு உலகத்தையே சுருங்க வைக்கக் கூடிய வசதி வாய்ப்புகள், தகவல் தொடர்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. Globalisation குளோபலிசேன் என்று சொல்கிற இந்த ஆங்கில வார்த்தைக்கு உலக மயமாக்குதல் என்று பொருள். எனினும் Think Globally Act Locally என்றும் சொல்கிறார்கள். உலக மயமாகிக் கொண்டிருப்பதால் நாட்டின் எல்லைக் கோட்டை யாரும் அழித்து விட விரும்புவதில்லை. ஒரே உலகம் என்று சொல்லப்பட்டாலும் தனித்தனி நாடுகள் 3