பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கின்றன. அந்த தனித்தனி நாடுகளில் தனித்தனி தேசிய னங்கள் இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் வாழ்கின்ற தனித்தனி மாநிலங்கள் இருக்கின்றன. " ஆனால், நம்முடைய சங்க காலத்துப் புலவர் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று ஒரே உலகத்திற்கு அழைப்பு விடுத்தான். பிரகடனம் செய்தான். அதை இந்தியாவின் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ருஷ்ய நாட்டிற்குச் சென்றிருந்தபோது "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இந்தத் தமிழ்ச் செய்யுளின் முதல் வரியை எடுத்துச் சொல்லி இந்தப் பாடலைப் பாடியவன் தமிழ்நாட்டுப் புலவன் என்று சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் மன்னித்துக் கொள்ள வேண்டும் தமிழர்களில் சிலர் கேளிர் என்பதை கொஞ்சம் நீட்டி யாதும் ஊரே யாவரும் கேளீர் - எல்லா ஊரும் நம்முடையதே, அதை எல்லோரும் கேளுங்கள் என்று அந்தப் பொருளினை கருதுகின்ற நிலை இருப்பதையும் நான் எண்ணி நாணாமல் இருக்க முடியவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஒரே உலகச் சிந்தனையோடு அன்றைக்குப் பாடல் எழுதிய கணியன் பூங்குன்றன் கூட தன்னுடைய ஊரை மறக்கவில்லை. அந்தப் புலவனுடைய பெயர் கணியன். அவன் பிறந்த ஊர் பூங்குன்றம். அந்தப் பூங்குன்றத்தின் பெயரை மறக்காமல் தன் பெயரான கணியன் என்பதுடன் இணைத்து கணியன் பூங்குன்றன் என்று தன்னை அழைக்குமாறு செய்தான். அதைப் போல உலகத்தில் வாழ்கிற நாம் நம்மை தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்வது கணியன் 4