பக்கம்:மாணவர்களுக்கு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

15


என் பள்ளி மாணவன் என்று இப்பள்ளி பெருமையடையும். இந்த பெருமைகளைத் தேடித் தரவேண்டிய பொறுப்பு உங்களுடையது என்பதை, இன்று உங்கள் பிஞ்சு உள்ளத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். இதுவே எனது முதல் அறவுரை.

மாணாக்கர்

உலகில் பேசப்படுகின்ற மொழிகள் இரண்டாயிரத்து இருநூறுக்கு மேற்பட்டவை என்பதும். அவற்றுள்ளும் எழுத்துள்ள மொழிகள் எண்ணுறுக்கும் உட்பட்டவை என்பதும். அவற்றுள்ளே இலக்கண இலக்கியம் படைத்துள்ள மொழிகள் இருநூற்றுக்குச் சற்று அதிகமானவை என்பதும் உலக மொழியறிஞர்களின் கருத்து. இத்தனை மொழிகளுக்கும் இல்லாத ஒரு தனிப்பெருஞ்சிறப்பு தமிழ்மொழி ஒன்றுக்கு மட்டுமே உண்டு.

நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு எண்பத்து ஆறாயிரத்து இருநூறு சொற்கள் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்மொழிக்கே உரிய சொந்தச் சொற்கள். இந்த அளவு அதிக எண்ணிக்கையுடைய சொந்தச் சொற்கள் உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லை. ஆங்கில அகராதியில் இலட்சக்கணக்கான சொற்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஆங்கில மொழிக்குரிய சொந்தச் சொற்கள் அல்ல. இருபதினாயிரத்துக்கு மேல் இல்லை என்றே இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள ஆங்கில மொழிப் பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/14&oldid=1265182" இலிருந்து மீள்விக்கப்பட்டது