பக்கம்:மாணவர்களுக்கு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மாணவர்களுக்கு

இரஷ்யா இன்று உலகில் சிறந்து விளங்குவதற்கு அடிப் படைக் காரணம் அது நூல் நிலையங்களைப் பெருக்கியது தான். 'ஒரு வாசகசாலையைத் திறக்கிறவன் ஒரு சிறைச் சாலையை மூடுகிறான்" என்பது ஒரு அறிஞனின் கருத்து. இதை அறிந்தே இரஷ்யமக்கள் வீதிதோறும் நூல் நிலையங் களை அமைத்தார்கள். மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அறிவுடையவர்களாக ஆனார்கள். தொழிலைப் பெருக்கினார்கள். பொருளாதாரத்தைப் பெருக்கினார்கள். இன்று ஆயுதங்களையும் பெருக்கி வைத்து அமெரிக்காவுக்கு எதிராக சமமாக நிற்கிறார்கள். இத்தகைய உயர்ந்த நிலைக்கு அம்மக்களின் அறிவைப் பெருக்கியதே அங்குள்ள நூல் நிலையங்கள்தான்

அத்தகைய நூல் நிலையங்களுக்குச் சென்று, நான் சொல்லுகிற மாதிரி ஒரு புத்தகத்தை எடுங்கள் என்று கேட்டால், அந்நூல் நிலையத்தின் தலைவன் செயலாளன் மட்டுமல்ல அங்குள்ள நிலைப் பெட்டிகளைத் துடைக்கிற ஆள் சொல்லி விடுவான் நீங்கள் கேட்கிற மாதிரி ஒரு நூல் இங்கு இல்லை' என்று. நீங்கள் எப்படிக் கேட்க வேண்டும். அரசியலுக்குப் புறம்பாக, மதத்திற்குப் புறம் பாக, விஞ்ஞானத்துக்குப் புறம்பாக வரலாற்றுக்குப் புறம்பாக, மருத்துவத்துக்குப் புறம்பாக, ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் சொல்லுகிற ஒரு நூலை எடுங்கள் என்று கேளுங்கள். இல்லை என்றே விடை வரும், ஆனால் தமிழ்ச் சான்றோர்கள் ஒழுக்கத்தைப் பற்றி எழுதிய தமிழ் இலக்கியங்கள் ஒன்றல்ல, பல இலக்கியங்கள் நம்மிடையே உள்ளன. அவை ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஏலாதி, இன்னிலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/17&oldid=1261063" இலிருந்து மீள்விக்கப்பட்டது