பக்கம்:மாணவர்களுக்கு.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

33

என்பன. இவை பத்தையும் வெவ்வேறு சொற்களால் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடிய ஒன்று. மாணவர்களாகிய நீங்கள் இவற்றைப் பின்பற்றி நடந்தால் மக்கட் சமூகத்தில் நீங்கள் உயர்ந்து காணப்படுவீர்கள்,

ஏ. கல்வியின் உயர்வு

கல்வியும் ஒரு செல்வம்; அது உயர்ந்த செல்வம்; "ஈடு இலாச் செல்வம்" என்றவர் திரு. வி. க. "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு. கேடு இல்லாத சிறந்த செல்வம் என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும் என்பது இதன் கருத்து.

பிற செல்வங்கள் நீராலும், நெருப்பாலும் அழிந்துவிடும். ஆனால் கல்விச் செல்வம் வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது. கொள்ளையிட முடியாது. கொடுத்தாலும் குறையாது. பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ளவும் முடியாது.

ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு இதிலிருந்த தெரிவது என்னவெனில் "ஒரு மன்னனிடத்தில் உள்ள செல்வங்கள். அனைத்திலும் கற்றவரிடத்தில் உள்ள கல்விச்செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும்" என்பதுதான்.

பிற செல்வங்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே என்றும் அழியாச் செல்வமாகும்.


மா—3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/32&oldid=1268679" இலிருந்து மீள்விக்கப்பட்டது