பக்கம்:மாணவர்களுக்கு.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

 மாணவர்களுக்கு

மற்றச் செல்வங்களைத் தேடிப் பயன் பெற்று மகிழ வேண்டுமானால் ஒருவன் கல்விச் செல்வத்தையும் பெற்றிருக்க வேண்டும். இன்றேல் எச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அவன் அதனால் பயன்பெறான். அது மட்டுமல்ல, அதனால் அவன் துன்பத்தையும் அடைய நேரிட்டுவிடும்.

ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் கல்விச் செல்வத்தைப் பெற முயன்று பாடுபட வேண்டும்.

ஐ. கல்லாமையின் இழிவு

செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது காணக்கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதான் நிற்பது காணச் சகியாத காட்சியாகும்.

கல்லாத மக்கள் களர் நிலத்தைப் போன்றவர், கல்லாத மக்களாலும் களர் நிலத்தாலும் எவருக்கும் பயனில்லை,

விதைக்காதபோது விளைவும், சமைக்காதபோது உணவும், உழைக்காதபோது பயனும் இல்லாததுபோல கல்லாத போது சிறப்பும் இல்லை.

பல துறையில் பல நூல்களைப் படிப்பதைவிட ஒரு துறையில் சில நூல்களைப் படிப்பது நல்லது. ஆம். அகலமாக உழுவதிலும், ஆழமாக உழுவதே நலமாகும்.

கல்வி வேறு, அறிவு வேறு என்பதை ஒப்புகிற ஒவ்வொரு வரும் கற்றவனுடைய அறிவு வேறு என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கற்றவரும் கல்லாதவரும் மக்களேயன்றி கற்களேயாயினும் முன்னது வைரக்கல்,பின்னது கருங்கல் என்றாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/33&oldid=1268685" இலிருந்து மீள்விக்கப்பட்டது