பக்கம்:மாணவர்களுக்கு.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

-

மாணவர்களுக்கு

தகுந்த இடத்தில் நகைச்சுவைகளை உயர்ந்த முறைகளில் அமைத்துப் பேசுவது நல்லது நகைச்சுவைகளில் ஒரு மயிரிழை தவறினாலும், அது நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவையும், நையாண்டியும் வெவ்வேறு. நகைச்சுவை அறிவாளிகளை மகிழ்விக்கும். நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும், நீ பேசியது நகைச்சுவையா? நையாண்டியா? என்பதை அதைக் கேட்டு மகிழ்ந்தவர்களைக் கொண்டே நன்கறியலாம்.

பேச்சுக்களில் சொற்கள் சுருக்கமாவும், கருத்துக்கள் அதிகமாகவும் இருத்தல் வேண்டும், இன்றேன் அது நெற்பதரைப் போல சொற்பதராகக் காட்சியளித்து விடும்.

சிலம்பு விளையாட்டு என்று ஒன்று உண்டு. அதில் குச்சி அதிவேகமாகச் சுழலும். ஆனால் எதிரியின் மேல் படாது. அக்குச்சிச் சிலம்பைப்போல சொற்சிலம்பை விளையாடுகிறவர்களும் உண்டு. அது கேட்பவர்கள் மனதில் பதியாது,

ஒரு நல்ல பேச்சு என்பது கேட்டவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து தங்கியிருக்க வேண்டும். இன்றேல் அதை ஒரு சிறந்த பேச்செனக் கூற முடியாது.

அடுக்குச் சொற்களும், அலங்கராச் சொற்களும் பேச்சுக்குத் தேவைதான். ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். அவற்றை அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் கேட்பவர் உள்ளத்தில் ஒரு வெறுப்பை உண்டாக்கிவிடும். முதல் முதலாக மேடையேறிப் பேசும் பொழுது சிலருக்கு தொடை நடுக்கம்வந்து விடும். அப்போது, அவர்கள் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/45&oldid=1271703" இலிருந்து மீள்விக்கப்பட்டது