பக்கம்:மாணவர்களுக்கு.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மாணவர்களுக்கு

வைதல் என்றாகி விடும். ஆகவே இம்முறைகளை பேச்சாளராக விரும்புகிறவர்கள் நன்கு அறிந்து, கடைப்பிடித்துப் பேசுவதே நலமாகும்.

மேடையேறிப் பேசும் பொழுது தன் கருத்துக்களை கொள்கைகளை நன்கு விளக்சிப் பேசவேண்டும். மாறுபட்ட கருத்துக்களை எவரும் கூறியிருந்தால். அவற்றில் உள்ள தவறுகளையும் காரணங்காட்டி மறுக்கலாம். மாறுபட்ட கருத்தைக் கூறியவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதோ, அவர்களைத் தாக்கிப் பேசுவதோ கூடாது. மாறுபட்ட கருத்தைக் கூறியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை வைது பேசுவது தவறு. வைகிறவன் வையப்படுவான். எவன் முன்னேறினாலும், வைகிறவன் முன்னேற முடியாது

நாட்டை, மொழியை, மக்களை, சமூகத்தைச் சீர்திருத்த எண்ணுகிறவர்கள் முதலில் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எழுத்தாளனுக்கு மட்டுமல்ல பேச்சாளனுக்கும் தேவை.

அமெரிக்காவில் ஒரு கோடீஸ்வரன். எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன என்பது அவனுக்கே தெரியாது. கடந்த உலக மகாயுத்தத்தில் அவனது மகன் இறந்து போனான். அதைக் கேட்டதும் அவன் உடன் பிறந்த சகோதரியும் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். மகனும், மகளும் இறந்த ஓராண்டுக்குள்ளாகவே அவன்து மனைவியும் இறந்து போனாள். அக் கோடீஸ்வரன் தனி மனிதன் ஆனான். உறவினர் எவரும் இல்லை. தன் சொத்துக்களை என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. நண்பர்கள் பலரிடம் ஆலோசனை கேட்டான். கல்லூரிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/47&oldid=1271715" இலிருந்து மீள்விக்கப்பட்டது