பக்கம்:மாணவர்களுக்கு.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மாணவர்களுக்கு

இந்நிகழ்ச்சி 1916-ல் ஏற்பட்டது. மேடையேறிப் பேசும் பேச்சாளருக்கு இது ஒரு படிப்பினையாக இருக்குமென நம்புகிறேன்.

இன்னும் ஒன்று. நபிகள் நாயகம் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கிழவி தன் பேரனைக் கூட்டிக் கொண்டு போய், “இவன் சர்க்கரை அதிகமாக சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாம் என்று இவனுக்குப் புத்தி சொல்லுங்கள்” எனறு கேட்டுக் கொண்டாள். உடனே நாயகம் அவர்கள் அக்கிழவியை, “மூன்று நாட்கள் கழித்து வா” என்று சொல்லி விட்டார்.

அப்படியே மூன்றாம் நாள், மூன்றாவது ஊரில் நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிழவி தன் பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள். நாயகம் அவர்கள் பையனை அழைத்து. “இனி சர்க்கரை சாப்பிடாதே, போ” எனக் கூறினார். கிழவி நினைத்தாள், “பூ... இதைக் கூறவா மூன்றுநாட்கள் தேவை” என்று. உடனே நாயகம் அக்கிழவியைக் கூப்பிட்டு, “நீ என்ன நினைக்கின்றாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டுமல்ல. நானும் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறவன். அது தீமை தரும் என்பது எனக்குத் தெரியாது. மருத்துவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'அவவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' எனக் கூறி, அதை அடியோடு நிறுத்தி விடுவது நல்லது என்றும் கூறினார்கள். மூன்றாம் நாள் முயன்றேன், என்னால் முடியவில்லை. நேற்று முயன்றேன். பாதியளவுதான் விட முடிந்தது. இன்று காலையிலிருந்து முயன்றேன். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட முடிந்தது. அதனால்தான் உன் பேரனுக்கு இந்த அறிவுரை கூறினேன்” என்றார். இதைக் கேட்ட கிழவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/49&oldid=1271728" இலிருந்து மீள்விக்கப்பட்டது