பக்கம்:மாணவர்களுக்கு.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

53

மொழிச் சொற்களையே வேண்டும். ஒரு மொழியை எழுதும்போது பிறமொழி எழுத்துக்களைக் கலப்பதும், ஒரு மொழியில் பேசும்போது பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் தவறு. இதனைக் கலப்பட மொழியெனக் கூறி அறிஞர்கள் வெறுத்துவிடுவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னே நான் சென்னை கடற் கரையிலிருந்தேன். அங்கு ஒரு கல்லூரி மாணவன் மற்றொரு மாணவனை நோக்கி, ‘ஏன் பிரதர் லாஸ்ட் வீக் பீச்சுக்கு வரல’ என்று கேட்டான். அதற்கு மற்றவன் வரலாம் என்று தான் ஸ்டார்ட் பண்ணினேன்; மதரும் ஃபாலோ பண்றேன்னா, ஃபீமேல்ஸ்ஸை அழைத்துக் கொண்டு. வருவது நான்சென்ஸ் என்று ஸ்டாப் பண்ணிட்டேன் பிரதர்’ என்றான். இது தமிழா? ஆங்கிலமா? தமிழ் ஆங்கிலமா? ஆங்கிலத்தமிழா? காலக் கேடா என்பது புலப்படவில்லை.

மாணவர்களாகிய நீங்கள் இத்தவறைச் செய்யக் கூடாது. பல மொழிச் சொற்களைக் கலந்து எழுதுகிறவனும், பேசுகிறவனும், ஒரு மொழியிலும் பற்று இல்லாதவன் என்று ஆகி விடுவான். அந்தப் பழி உங்களைச் சேர விடக்கூடாது.

க. நாடு போகும் போக்கு

கடந்த நூற்றாண்டுக்கு ஒரு பெருமை உண்டு. அப் பெருமை சான்றோர்கள் பலரைப் பெற்றுக் கொடுத்ததால் ஏற்பட்ட பெருமை. வடலூர் இராமலிங்க அடிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார், அஷ்டாவதானம் கல்யாண சுந்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/52&oldid=1430817" இலிருந்து மீள்விக்கப்பட்டது