பக்கம்:மாணவர்களுக்கு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

59

உதடுகளும் இவ்வாறுதான் அசைய முடியும். வேறு வகையாக அசைக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் முயன்று பார்க்கலாம்.

இந்த உதடு அசைவையே உயிர் ஒலியாகக் கொண்டு அதற்கு உயிர் எழுத்துக்களை அமைத்த தமிழ்ச் சான்றோர்களது ஆற்றல் எண்ணி எண்ணி வியக்கக் கூடிய ஒன்று.

இந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தையுமே ஆங்கிலேயர்கள் தங்களுடைய உயிர் எழுத்துக்களாக எ, இ, ஐ, ஒ, யு. என அமைத்திருக்கின்றனர். தமிழில் இந்த ஐந்து எழுத்துக்களையும் குறில் என்றும், இதை ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என நீட்டி ஒலிப்பதை நெடில் என்றும் அமைத்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் வடமொழியில் இது இல்லை. குறிப்பாக எ, ஒ என்ற ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை. எலி, எடு, கெடு, எட்டு என்று ஆங்கிலத்தில் எழுத முடியாது. ஏலி, ஏடு, கேடு, ஏட்டு என்றுதான் எழுத முடியும். அதேபோல கொடி, பொடி, கொடு, கொட்டு என்று ஆங்கிலத்தில் வடமொழியில் எழுத முடியாது. கோடி, போடி, கோடு, கோட்டு என்றுதான் எழுத முடியும். இக்குறைபாடு இல்லாமல் தமிழ்ச் சான்றோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒலி இலக்கணத்தை அமைத்திருக்கிறார்கள். அது அ,இ,உ,எ,ஒ என்று ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவு, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவு; க், ச், ப், ம், த் என்று ஒலிப்பதற்கு அரை மாத்திரை அளவு. இவ்வாறு கூறுகிற நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் பெயரைக்கூட ஆங்கில எழுத்துக்களில் எழுத முடியாது. தோல்காப்பியம் என்று தான் எழுத முடியும். அதை மொழிபெயர்ப்பவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/58&oldid=1434687" இலிருந்து மீள்விக்கப்பட்டது