பக்கம்:மாணவர்களுக்கு.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மாணவர்களுக்கு

‘லெதர் லிட்டரேச்சர்’ என்றுதான் மொழிபெயர்ப்பான். இக்குறைபாடு தமிழுக்கு இல்லை. எப்படி நம் தாய் மொழியின் ஒலிச்சிறப்பு. இதை எண்ணி எண்ணிப் பெருமையடைய மாணவர்களாகிய உங்களுக்கு உரிமையுண்டு.

கு. படிப்பினை

காந்தியடிகளுக்கு வயது ஒன்பது. பள்ளி மாணவப்பருவம். ஒரு நாள் பார்த்தார் அரிச்சந்திரன் நாடகத்தை நாடகத்தின் கரு உண்மையைப் பேசுதல் என்பது. அதை ஒரு படிப்பினையாக ஏற்றுக் கொண்டு, இனி உண்மையே பேசுவது என்ற உறுதியும் எடுத்துக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் செயல்படுத்திக் காட்டினார். உலகம் அவரை ஒரு உயர்ந்த மனிதராக ஏற்றுக் கொண்டிருக்கிறது. நம்மில் எத்தனையோ பேர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தோம்? எத்தனை பேர் அந்த படிப்பினையை ஏற்றுக் கொண்டோம்? இல்லை.

எனக்கு இளமையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் தசரா பண்டிகையைப் பார்த்துவிட்டு பெங்களுருக்குத் திரும்பினேன். அங்கு சர். விஸ்வேசர ஐயா வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போனேன். அனுமதி கிடைக்கவில்லை. அரண்மனைக் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர் துணையுடன் மறுபடியும் அவரைப் பார்க்கப் போனேன். என்னுடன் வந்த அந்த ஒப்பந்தக்காரர் “திருச்சியிலிருந்து ஒரு பொதுத் தொண்டர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்”, என்று கூறினார். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த சர். விஸ்வேசரய்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/59&oldid=1435630" இலிருந்து மீள்விக்கப்பட்டது