பக்கம்:மாணவர்களுக்கு.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மாணவர்களுக்கு

ஐயா அவர்களின் அறிவுரை என் காதுகளில் ஒவ்வொரு வினாடியும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அது ஒரு நல்ல படிப்பினையாக இருந்ததால், அதை பேய் பிடிப்பது போலப் பிடித்துக் கொண்டு உறுதியாக செயல்படுத்தி வருகிறேன். இன்றைக்கு எனக்கு ஏதேனும் ஒரு செல்வாக்கும் மதிப்பும் இருக்கிறது என நீங்கள் நம்பினால், அது சர். விஸ்வேசர ஐயா அவர்களின் அறிவுரைகளால் விளைந்தது என்றே கூற வேண்டும்.

நமச்கு கண், காது, வாய் மூன்றும் இருக்கின்றன. எத்தனையோ இலக்கியங்களைப் படிக்கிறோம். எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்கிறோம். நாட்டில் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். நாம் எவற்றையும் ஒரு படிப்பினையாக ஏற்று வாழக்கைக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இது பெருந் தவறு. மாணவர்களாகிய நீங்கள் படிப்பவைகளை, பார்ப்பவைகளை, கேட்பவைகளை, கருத்தூன்றிச் சிந்தித்து அவற்றில் உள்ள நல்லவைகளைப் படிப்பினையாக ஏற்று, வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றேல் படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும் பயனற்றதாகி விடும்.

கூ. முடிவுரை

மாணவ, மாணவிகளே! உங்களுக்கு இறுதியாகவும், உறுதியாகவும். ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளத்தைத் துய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், சொல்லையும் துய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் செயல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/61&oldid=1435632" இலிருந்து மீள்விக்கப்பட்டது