பக்கம்:மாணவர்களுக்கு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. ஆ. பெ. விசுவநாதம்

65

உடுத்தும் உடைக்கும், வாழும் இடத்துக்கும் ஒரு அளவு இருப்பது போலக் கல்வி கற்பதற்கும் ஒரு அளவு இருத்தல் வேண்டும். 'Y' என்ற எழுத்தை மறுபடியும் பாருங்கள். கீழே உள்ள கோடு ஒரு வழி மேலே உள்ள இரு கோடுகளும் இரு வழிகள், இந்த மூன்று வழிகளும் சந்திக்கும் இடம் முச்சந்தி.

கீழ்க்கேடு 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. மேலே உள்ளே வலது புறக்கோடு கல்லூரிப் படிப்பு. இடதுபுறமுள்ள கோடு குடும்பப் படிப்பு, மூன்றையும் இணைத்திருக்ரூம் முச்சந்தி மேல் நிலைப்பள்ளிப் படிப்பு.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்கள் இம்முச்சந்திப்பில் நிற்கிறார்கள். அதற்குமேல், அவர்களுக்கு இரு வழிகள் தெரிகின்றன. எந்த வழியில் செல்வது? என்பதை மகளிர் அந்த முச்சந்தியில் நின்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரே கேள்வி தான். கல்லூரியில் படித்து வேலை பார்ப்பதா? திருமணம் செய்து குடும்பத்தை நடத்துவதா? இதைப் பெற்றோர்களில் பலர் சிந்திப்பதில்லை. அதைப் பெண் மக்களிடமே விட்டு விடுகிறார்கள். ஆகவே பெண் குழந்தைகள் தான் தங்கள் எதிர்காலத்தை நன்கு சிந்தித்து ஏதாவது ஒரு வழியில் நடந்தே ஆக வேண்டும்.

வேலைக்குப் போய்ப் பொருள் தேட வேண்டும் என்று விரும்புகிற பெண்களும், பொருளைத் தேடித் தான் வாழ வேண்டும் என்ற நிலையில் உள்ள பெண்களும் கல்லூரிக்குச் சென்று படிப்பதே நலமாகும். இதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை, சிந்திக்க வேண்டிய வேலையும் இல்லை. மா. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/64&oldid=1267722" இலிருந்து மீள்விக்கப்பட்டது