பக்கம்:மாணவர்களுக்கு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மாணவர்களுக்கு


அழகும் வெம்பிப் போயிற்று. நான் என்ன செய்வேன்? என் மகளுக்குத் திருமணமே ஆகாதா?

உறவு விரும்பி : "எனக்கு ஒரே பெண். என் தங்கை மகன் என் மகளை மணப்பானென்று அவனையும் நானே எம். ஏ. வரை படிக்க வைத்தேன், என் பெண்ணும் பி. ஏ., வரை படித்துப் பட்டம் பெற்றாள். திருமணத்திற்கு நாள் குறிக்கத் தொடங்கிய பொழுது, என் தங்கை மகன். 'ஏதாவது ஒரு உயர்நிலைபப்பள்ளியில் படித்த பெண்ணைப் பாருங்கள். எனக்கு கல்லூரியில் படித்த பெண் வேண்டாம்’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டான். கல்லூரியில் படித்த பெண்களை மணக்க கல்லூரியில் படித்த ஆண்களே மறுத் தால் என்ன செய்வது?

கைவிட்டு விட்டவர் : "என் பெண்ணுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை என்று சிலர் என்னைக் கேட்கிறார்கள். என்னை ஏன் கேட்கிறீர்கள். இந்தக் கேள்வியை என்பெண்ணிடமே கேளுங்கள். அது அவள் விருப்பம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்."

கவலையற்றவர் : 'கல்லூரியில் என் பெண்ணைப் படிக்கவைத்த அன்றே இனி உன் எதிர்காலத்தை நீயே தேடிக் கொள்ள வேண்டும் என்று சொல்லித்தான் படிக்க வைத்தேன். ஆகவே என் பெண்ணைப் பற்றி எனக்கு கவலை யில்லை.”

இவ்வாறு பலர் பலவாறு கூறுகிறார்கள். இவற்றை யெல்லாம் கேட்டறிந்த பலர், நம் சமூகம் சரியாக இல்லை என்று மனம் புழுங்கி வாடுகிறார்கள்:

ஆகவே, உயர்நிலைப் பள்ளியின் உச்சத்தில், மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் பெண்கள் 'Y' எழுத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/69&oldid=1265197" இலிருந்து மீள்விக்கப்பட்டது