பக்கம்:மாணவர்களுக்கு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மாணவர்களுக்கு

என்பது பாரதியார் வாக்கு. இதற்குப் பொருள் தெரிய எனக்குப் பல ஆண்டுகள் பிடித்தன.

மணப்பாரை சந்தையில் மாடு வாங்கப் போய் ஒரு பசுவை 150 ரூபாய்க்கு கேட்டுக் கொண்டிருந்தேன். வயது சென்ற பெரியவர் ஒருவர் என் கையைக் கிள்ளி, தனியே அழைத்துப் போய், “பசுமாட்டை விலைக்கு கேட்டாயே, அதன் சுழுத்தைப் பார்த்தாயா? அதில் கறுப்பு இருக்கிறதே” என்றார். 'கறுப்பு இருந்தால் என்ன?' என்று கேட்டேன். “அவன் பசு மாட்டின் கழுத்தில் நுகத்தடியை வைத்து ஏரில் பூட்டி உழுதிருக்கின்றான்; ஏற்றில் பூட்டியும் நீர் இறைத்திருக்கின்றான்” என்று அக்கறுப்பு தெரிவிக்கிறது. பசு மாட்டை ஏரில் பூட்டி உழுதால் மூச்சுக் கட்டி இழுப்பதன் மூலம் அதன் பால் சுரப்பிகள் பழுதுபடுகின்றன. அவை சரியாகப் பால்கறக்காது என்று கூறினார்.

நான் வியந்து போனேன். ஏர் உழுவதும், நீர் இறைப்பதும் காளை மாட்டின் வேலைகள். கன்று போட்டுப் பால் கொடுப்பது பசுமாட்டின் வேலைகள். காளைமாட்டு வேலையைப் பசுமாடு செய்தாலும், பசு மாட்டின் வேலைகளைக் காளை மாடு செய்ய முடியாது காளை மாட்டின் உறுப்புகளும், பசுமாட்டின் உறுப்புகளும் வெவ்வேறு. எப்படி ஆனகளோடு பெண்களும் சரி நிகராக வாழ்வது என்ற ஐயம் மேலும் எனக்குத் தோன்றியது.

1930ல் சிங்கப்பூரில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதில் நான் ஒருவன்தான் தமிழன். மற்றவர்களெல்லாம் மலாய்க்காரர்களும். சீனர்களுமாக இருந்தார்கள். ஒரு திருப்பத்தில் ஒரு ஜப்பானிய இளம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/71&oldid=1267710" இலிருந்து மீள்விக்கப்பட்டது