பக்கம்:மாணவர்களுக்கு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மாணவர்களுக்கு

என்று பொய்யில் புலவன் வழிநின்று விளக்குகிறார். ஒழுக்கம் இழந்தவன் தான் செய்யாது பிறர் செய்த பழியையும் ஏற்க வேண்டிவரும் என்று, 'எய்துவர் ஏய்தாப் பழி' எனும் தொடருக்குக் கூறியுள்ள விளக்கம் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று (ப. 20)

"பொய்யைச் சொல்லாதே. புலாலை உண்ணாதே,
கள்ளைக் குடியாதே. களவை நினையாதே,
கர்மம் கொள்ளாதே, கொலையைச் செய்யாதே,
சூதை விரும்பாதே, சிற்றினம் சேராதே,
புறங் கூறாதே, பொறாமை அடையாதே"

என்று தமிழ்மறை கூறும் பத்துக் கட்டளைகளை ஒழுக்க நெறிகளாகப் பின்பற்றுமாறு மாணாக்கர்க்கு அறிவுறுத்துகிறார் (ப. 20).

மாணாக்கர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆற்றல் மிக்கவராக விளங்குவர். அவர்தம் திறைமயறிந்து ஊக்குவிக்க வேண்டும். ' கூர்மையான அறிவுடைய மாணாக்கர் தமது அறிவுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஓர் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தனிமை அவர்களைத் தவறான வழிகளில் ஈடுபடுத்திவிடும்” என 'அல்லி' எனும் புதினத்தில் அறிஞர் மு.வ. குறிப்பிடுவார், கி.ஆ.பெ. அவர்கள் மாணாக்கர் பேச்சாற்றல், எழுத்தாற்றல் முதலியனவற்றை வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவதோடு, அதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறார். "சொற்பொழிவு என்பது உயர்ந்த சொற்களைத் தேடிப் பிடித்து ஒன்றின்பின் ஒன்றாக முறைப்படுத்தி அமைத்து, உரத்த குரலில் கூட்டத்தில் கடைசியில் உள்ள மக்களைப் பார்த்தும், சில சமயங்களில் இடதுபுறமும், வலதுபுறமும் பார்த்தும் ஒரு வரம்புக்கு உட்பட்டுப் பிழையின்றிப் பேசுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/8&oldid=1267698" இலிருந்து மீள்விக்கப்பட்டது