பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


ஒருசமயம், தமக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொள்வதற்காக, பெருமானார் அவர்களிடம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக, அப்துல்ஹ்இப்னு அபில் அம்ஸா என்பவர் கூறிச்சென்றார். ஆனால், என்னவோ மறந்துவிட்டார். காலம் கடந்து அங்கே போன சமயம், பெருமானார் அவர்கள் அவ்விடத்திலேயே அவரை எதிர்பார்த்து இருக்கக் கண்டார். எனினும் அவரிடம் பெருமானார் அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ உண்டாகவில்லை.

“எவ்வளவு நேரமாக இவ்விடத்திலேயே இருக்கிறேன். எனக்கு கஷ்டத்தைக் கொடுத்து விட்டீரே!” என்று மட்டும் கூறினார்கள் பெருமானார் அவர்கள்.


12. சச்சரவைத் தீர்த்து வைத்தார்கள்

ஒருசமயம், மக்காவில் நிகழக் கூடியதாயிருந்த ஒரு பெரிய சண்டை பெருமானார் அவர்களின் தீர்க்கமான அறிவுக் கூர்மையாலும், சமாதானத் தூண்டுதலாலும் தவிர்க்கப்பட்டது.

அரேபிய நாடு முழுமைக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் கஃபா வின் மதில் பழுதடைந்த நிலையில் இருந்தது: மக்கா வாசிகள்