பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


அதை ஒப்புக்கொண்டு அனைவரும் சென்று விட்டனர்.

மறுநாள் காலை; ஆண்டவனுடைய அருளால், கஃபாவின் வாசலில், பெருமானார் அவர்களை மக்கள் அனைவரும் காண நேர்ந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரஞ் செய்தனர்.

நம்பிக்கைக்கு உரிய பெருமானார் அவர்கள் செய்யும் முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் என எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

உடனே பெருமானார் அவர்கள், அழுத்தமான, அகலமான ஒரு துணியைக்கொண்டு வரச்சொல்லி, அதன் மத்தியில், தங்கள் திருக்கரங்களால் ஹஜருல் அஸ்வதைத் தூக்கி வைத்தார்கள். பிரச்னை உண்டு பண்ணிக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்து, அவர்கள் அனைவரையும் அந்தத் துணியைச் சுற்றிலும் பிடித்துக்கொண்டு, கருங்கல்லை நிறுவ வேண்டிய இடத்தில் அதைத் தூக்கி வைக்குமாறு கூறினார்கள். அவர்கள் அவ்வாறு