பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



16. அடிமையை விடுவித்த உயர்பண்பு

செல்வந்தன்-ஏழை; முதலாளி-அடிமை என்ற வேறுபாடின்றி எல்லோரிடமும் அன்பும் சமத்துவமும் கொண்ட இயல்பு உடையவர்களாக பெருமானார் விளங்கினார்கள்.

இந்தச் சமத்துவ இயல்பினால், பெருமானார் உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

போரில் சிறைப்பட்டவர்களை, அடிமைகளாக்கி, அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தின் வழக்கமாயிருந்தது.

ஒரு சமயம், சிறைப்பிடித்து அடிமையான ஜைதுப்னு ஹாரிதா என்பவரை விற்பனை செய்வதற்காகச் சந்தைக்குக் கொண்டு சென்றனர். அவரை, ஹக்கீம் இப்னு ஹஸ்ஸாம் என்பவர் விலைக்கு வாங்கி, தம் தந்தையின் சகோதரி கதீஜா நாயகியாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

கதீஜா நாயகியாரோ, அந்த அடிமையைப் பெருமானாருக்குக் கொடுத்துவிட்டார்கள்.

"பெருமானார் அவர்கள், உடனே ஜைதை அடிமையிலிருந்து விடுவித்து, நீர் இங்கே இருக்க