பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

விரும்பினால் இருக்கலாம்: அல்லது உம் விருப்பம் போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் போகலாம்" என்று கூறினார்கள்.

அவர்களுடைய உயர்பண்பால் உள்ளம் நெகிழ்ந்த ஜைது பெருமானார் அவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லாதவராய் அவர்களின் காலடியிலே என்றும் இருந்துவிட்டார்.

ஜைது அடிமையான செய்தியை அறிந்த அவருடைய தந்தை, மகனை விடுவித்து அழைத்துப் போவதற்காகத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு தேடிவந்தார்.

அவர் மக்கா வந்ததும், தம் மகன் விடுதலை அடைந்த தகவல் தெரியவந்தது. மகனை தம்மோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

“அருமைத் தந்தையே! நான் விற்கவும் வாங்கவும் முடியாதபடி, பெருமானார் அவர்களின் அடிமையாகி விட்டேன். மேலும், அவர்களின் மேன்மைக் குணங்கள், பெற்றோரின் அன்பையும் சொந்த வீட்டின் சுகத்தையும் மறக்கச் செய்துவிட்டன!” என்று உள்ளம் கனியக் கூறி, தந்தையை அனுப்பிவிட்டார் ஜைது.

அடிமையாயிருந்த ஜைதை சுதந்திர மனிதனாக்கியதோடு அல்லாமல், தம் சொந்த