பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


உமர் இஸ்லாத்தைத் தழுவியதும் நிலைமையோ மாறிவிட்டது! உமர் இஸ்லாத்தை தழுவிய செய்தியை எல்லோருக்கும் அவர்களே அறிவித்தார்கள்.

அதன்பின்னர், முஸ்லிம்கள் கஃபாவில் எவ்வித பயமும் இல்லாமல் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

22. பிராட்டியாரின் பிரிவு

கதீஜா பிராட்டியார் பெருமானார் அவர்களின் கருத்துக்கேற்ப இணைந்து வாழ்ந்தனர். தொல்லையும் துன்பமும் சூழ்ந்த வேளைகளில் பெருமானார் அவர்களுக்குப் பிராட்டியார் ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

பெருமானார் அவர்களுக்கு கதீஜா பிராட்டியாரிடம் ஒரு ஆணும் நான்கு பெண்களும் பிறந்தனர். ஆண்குழந்தை இளமையிலேயே இறந்துவிட்டது. பெண்கள் நால்வருக்கும் திருமணம் செய்து வைக்கப்பெற்றது.

பெருமானார் அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்த பத்தாவது ஆண்டில், இரண்டு துக்க நிகழ்ச்சிகள் உண்டாயின.