பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


அவ்வாறே முஸ்அப் இப்னு உஹைமர் என்பவரை அவர்களுடன் பெருமானார் அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

முஸ்அப் யத்ரிபுக்குச் சென்று அஸ்அது என்பவரின் இல்லத்தில் தங்கி, தினந்தோறும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று, 'திருக்குர்ஆனை' ஓதிக்காட்டி, இஸ்லாத்துக்கு அழைப்பார்கள். தினமும் ஓரிருவர் என பலர் இஸ்லாத்தில் சேர்ந்தனர். சில நாட்களிலேயே யத்ரிபிலிருந்து குபா வரையிலும் இஸ்லாம் பரவிவிட்டது.


24. மக்காவை விட்டுப் பிரிதல்

பகைவர்கள் உருவிய வாள்களோடு பெருமானார் அவர்களை எதிர்பார்த்துச் சூழ்ந்திருக்கின்றனர்.

அத்தகைய வேளையிலுங் கூட, பெருமானார் அவர்கள் உயிரைக் காட்டிலும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதையே பெரிதாகக் கருதினார்கள்.

அலி அவர்களை அழைத்து வரச்செய்து, "மக்காவை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்திருக்கிறது. என்னுடைய கட்டிலில் என்னுடைய போர்வையைப்