பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

28. புதல்வியர் திருமணம்

இந்த வருடத்தில் பெருமானார் அவர்களின் குமாரத்தி பாத்திமா நாச்சியார் அவர்கள், அலீரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கள்.

பெருமானார் அவர்கள் தங்கள் மகளுக்கு ஸ்திரீதனமாக தோல் படுக்கை, தோல் கூசா, இரண்டு திரிகைகள் இரண்டு மண்பானைகள் ஆகியவற்றையே அளித்தார்கள்.

இதே வருடத்தில்தான் ரமலாவினுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது. நோன்பு முடிந்த மறுநாள் ‘ஈதுல்ஃபித்ரு என்னும் பெருநாளாகக் கொண்டாடப் பெற்றது, தவிரவும் ஃபித்ரா, (ஸதக்கா) தர்மங்கள் செய்யும் முக்கிய காலமாகவும் கடைப்பிடிக்கப்பெற்றது அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியதும் இந்த வருடத்திலேதான் என்பது குறிப்பிடத்தக்கது (குத்பாச் சொற்பொழிவு).


29. பெருமானார் கண்ட கனவு

பெருமானார் அவர்கள் காலையில் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.