பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

என்று தோழர்களில் முக்கியமானவர்கள் பலரும் கூறினார்கள்.

பத்ரு போருக்குப் பிறகு வெளியே முஸ்லிமானவரும், அந்தரங்கத்தில் முஸ்லிம்களுக்குப் பகைவராகவும் இருந்த அப்துல்லாஹ் இப்னு உபையும், எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படையாகச் சொல்லாதவர். ஆனாலும் அவரும் எதிரிகளின் பலம் அதிகமாயிருப்பதால், திறந்த வெளியில் பகைவர்களை எதிர்த்துப்போரிடக் கூடாது என்று கூறினார்.

பத்ருச் சண்டையில் கலந்துகொள்ளாத வாலிபர்கள் சிலர் நகரைவிட்டு வெளியே போய் எதிரிகளைத் தாக்கவேண்டும் என ஒரு மனதாகச் சொன்னார்கள்.


30. கேடயமாக நின்று காத்தனர்

குறைஷிகள் வீரர்களுள் பெயர் பெற்ற அப்துல்லா இப்னு கமீயா என்பவர் முஸ்லிம் அணிகளை, வாளினால் வெட்டிக்கொண்டே முன்னேறி, நபி பெருமானாரின் சமீபமாக வந்து, கையிலிருந்த வாளை பெருமானாருக்கு எதிராக வீசினார். அந்த வாள் பெருமானார் அவர்களின் கவசத்தில் பட்டுக் கவசம் உடைந்தது. அதன்