பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கொண்டு பெருமானார் முகத்தின் முன் பிடித்து, எதிரிகளின் அம்பு தாக்காதவாறு மறைத்துக் கொண்டனர். பெருமானார் அவர்கள் எதிரிகளின் பக்கமாக தங்கள் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். அப்பொழுது அபூதல்ஹா, பெருமானார் அவர்களிடம் "தங்கள் தலையை உயர்த்தாமல் இருக்கவேண்டும். உயர்த்தினால் அம்புகள் பாயலாம். என்னுடைய மார்பை உங்களுக்கு முன்னே வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.


31. திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்

போரில் பெருமானார் அவர்கள் உயிர் துறந்து விட்டதாக, மதீனாவுக்குச் செய்தி எட்டி, அங்கிருந்தோர் பெருமானாரைக் காண்பதற்காக ஓடோடி வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் ஹன்லல்லா இப்னு அபூ ஆபீர் என்பவரும் ஒருவர். அவருக்கு அன்றுதான் திருமணமாகி இருந்தது. செய்தி கிடைத்ததும் மிகுந்த ஆத்திரத்தோடு, போர்க்களத்துக்கு ஓடி வந்தார். வந்ததும் குறைஷிகளின் அணிகளில் புகுந்து அவர்களை வெட்டி வீழ்த்தியவாறு முன்னேறி, அபூஸுப்யானையும் நெருங்கி விட்டார்.