பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49



33. கவலையும் துக்கமும் பறந்து ஓடின

மதீனாவிலிருந்து பனூ தீனார் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் பெருமானாரைக் காண்பதற்காக போர்முனைக்கு வந்தார். வரும் வழியில், போர்முனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிலர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, “உம்முடய தந்தை போரில் உயிர் துறந்து விட்டார்” என்று கூறினார்கள்.

அதற்கும் அந்தப் பெண்மணி, "நாம் எல்லோரும் ஆண்டவனிடம் இருந்தே வருகிறோம்; நிச்சயம் அவனிடமே மீண்டும் செல்வோம்" என்று கூறிவிட்டு, “பெருமானார் அவர்கள் எவ்வாறு உள்ளார்கள்?” என்று கேட்டார்.

அவர்கள், "உம்முடைய சகோதரரும் மரணம் அடைந்துவிட்டார்!" என்றனர் திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள்.

அதற்கும் முன் சொன்னவாறே கூறிவிட்டு மீண்டும்,"பெருமானார் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?" என்று வினவினார் அந்தப் பெண்மணி.

மறுபடியும் அவர்கள், "உம்முடைய கணவரும் கொல்லப்பட்டார்" என்றனர்.