பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உயிரைப் பலி கொடுக்கவே நான் மனப்பூர்வமாகத் தயாராயிருப்பேன் என்பதை ஆண்டவன் சத்தியமாக நான் கூறுகிறேன்" என்றார் ஸைத்.

அதைக்கேட்ட அபூஸுப்யான், "முஹம்மதை அவரைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு உண்மையான அன்போடு நேசித்து வருகிறார்களோ அவ்வளவு அன்போடு வேறு எவரையும் அவருடைய தோழர்கள் நேசித்து வந்திருப்பதை நான் பர்ர்த்ததில்லை" என்று கூறி வியப்படைந்தார்.

அதன்பின் ஸைதை வெட்டிக்கொன்றுவிட்டனர்.


35. கொலை செய்யச் சதி

யூதர்களுள் ஒரு பிரிவினரான பனூநலீர் கூட்டத்தார் முஸ்லிம்களுக்கு விரோதமாகக் கிளம்பினார்கள்.

அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நட்புறவு உடன்படிக்கை முன்னர் ஏற்பட்டிருந்தது. அந்த உடன்படிக்கையின்படி, நஷ்டஈடு சம்பந்தமாக அவர்களும் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய வேண்டியிருந்தது. அதைக் கேட்பதற்காக பெருமானார் அவர்கள் பனூநலீர் கூட்டத்தாரிடம் சென்றார்கள். ஆரம்பத்தில் அந்த கூட்டத்தார்