பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

உதவி செய்வதாகப் பாவனை செய்தார்கள். ஆனால் பெருமானாரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க மறைமுகமாகச் சதி செய்திருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் ஒரு சுவரின் பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த சுவரின் மேல் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பெருமானார் அவர்களின் மீது தள்ளி விடுவதற்காக ஒரு யூதர் மாடிக்குச் சென்றார். அந்தக் கல்லைத் தள்ள முயன்றும் அவருடைய நோக்கம் நிறைவேறவில்லை. பெருமானார் அவர்களுக்கு உதிப்பாக இச்செய்தி தெரிந்ததும் அங்கு இருந்து திரும்பிவிட்டார்கள்.


36. யூதர்களின் சூழ்ச்சி

பெருமானார் அவர்களை விரோதிக்குமாறு மக்காவிலுள்ள குறைஷிகள் மதீனாவிலுள்ள யூதர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

பனூநலீர் கூட்டத்தினர் ஏற்கனவே முஸ்லிம்களுக்குப் பகைவர்களாயிருந்து வந்தார்கள். குறைஷிகளின் கடிதம் கிடைத்ததிலிருந்து மேலும் பகிரங்கமாக விரோதத்தைக் காட்டத் தொடங்கினார்கள்.