பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

காலிதுப்னுவலீது, அம்ருப்னுல் ஆஸ் ஆகியோர் இக்காலத்தில் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.


44. ஆண்டவன் வழி காட்டுவான்

எனினும், உடன்படிக்கையின்படி, மக்காவிலே தங்கியிருந்த முஸ்லிம்களை குறைஷிகள் கொடுமைப்படுத்தி துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

அந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்காகப் பலர் மதீனாவுக்கு வரத் தொடங்கினார்கள். அவ்வாறு முதன்முதலில் வந்தவர் உத்பதுப்னு உஸைது என்னும் அபூபஸீர் ஆவார்.

அவர் மதீனாவுக்குப் போய்விட்ட செய்தியை அறிந்த குறைஷிகள் அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக, இருவரைப் பெருமானார் அவர்களிடம் அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்கள், அவரை மக்காவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

அப்பொழுது அவர் பெருமானார் அவர்களிடம், "குபிரில் சேருமாறு நிர்ப்பந்திக்கும் காபிர்களிடமா, என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார்.