பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

47. பெருமானார் அவர்களின் கடைசிப் போர்

கெய்ஸரின் ஆட்சிக்கு உட்பட்ட தவ்மத்துல் ஜந்தல் என்ற நாட்டின் சிற்றரசரான அக்கீதர் முஸ்லிம்களுக்குப் பகைவராக இருந்து வந்தார்.

அவரை அடக்கி வருமாறு காலித் அவர்களின் தலைமையில் நானுறு வீரர்களைப் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

படையினர் அங்கே சென்று, அக்கீதருடைய நாட்டைத் தாக்கி, அந்தச் சிற்றரசரைச் சிறைப் பிடித்தார்கள்.

அந்த அரசர், பெருமானார் அவர்களின் முன்வந்து உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின்மீது அவரை விடுவித்தனர்.

சில நாட்களுக்குப் பின், அவ்வரசரும் அவருடைய சகோதரரும் மதீனாவில் பெருமானார் அவர்களிடம் தஞ்சம் அடைந்து, ஆதரவுத் தேடிக் கொண்டார்கள்.

தபூபக்கில் இருபது நாட்கள் வரை பகைவர்களின் நடமாட்டம் காணப்படவில்லை. எல்லைப்புறப் பகுதி அமைதியாகத் தென்பட்டது.