பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


திருக்குர்ஆனை நன்கு மனப்பாடம் செய்தவர்களையே பிரச்சாரகர் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும்படி செய்வார்கள்.

பெருமானார் அவர்கள் ஒரு சமயம் பிரச்சாரகர்களை அனுப்ப எண்ணியபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் அனுப்பி வைத்தார்கள்.

அவர்களை அனுப்புமுன் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய முறைகளை பெருமானார் அவர்கள் போதித்தார்கள்.

பெருமானார் அவர்கள் கூறியவை:

பெருமானார் அவர்கள், அவர்களுக்குச் செய்த போதனையானது, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

"நீங்கள் காந்தமாகப் பணி செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யக் கூடாது. மக்களுக்குச் சிறந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்: அவர்களுக்கு வெறுப்பு உண்டாகுமாறு நடக்கக் கூடாது. நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யவேண்டும். வேறு மதத்தவர்களையும் நீங்கள் அங்கே சந்திக்கக்கூடும். அவர்களைக் காண்பீர்களானால்,