பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

மானவர்கள் பலரும் அக்கூட்டத்தில் சேர்ந்து தூது வந்திருந்தார்கள்.

இஸ்லாத்தில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் வந்திருந்த போதிலும் அவர்களுக்கு இயல் பாயுள்ள ஆடம்பரமான அகம்பாவம் மேலோங்கி இருந்தது.

பள்ளிவாசலை ஒட்டியுள்ள பெருமானார் அவர்களின் இல்லத்தின் முன் நின்று, "முஹம்மதே வெளியே வாருங்கள்" என்று கண்ணியமின்றி அழைத்தார்கள்.

பெருமானார் அவர்கள் வெளியே வந்தார்கள்.

அப்போது அக்கூட்டத்தார், பெருமானார் அவர்களிடம், "முஹம்மதே! எங்களுடைய பெருமையை எடுத்துச் சொல்வதற்காக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம்; எனவே, எங்கள் கவிஞருக்கும், பிரசங்கிக்கும் அனுமதி கொடுங்கள்" என்றார்கள்.

பெருமானார் அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள்.

தங்கள் கூட்டத்தாரிடம் வாக்குத் திறமையுள்ள உதாரிது என்பவரைச் அழைத்து, தங்கள் பெருமையை எடுத்துச் சொல்லும்படி கூறினர்.