பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


உதாரிது எழுந்து, "புகழனைத்தும் இறைவனுக்கே! அவனே புகழுக்கு உரியவன். அவனுடைய கருணையினாலேயே எங்களை அரசர்களாக்கித் திரண்ட செல்வங்களுக்கு அதிபதிகளாக்கினான். கீழ்த்தேசத்தில் இருக்கும் எல்லாக் கூட்டத்தார்களிலும் எங்களை வலிமையிலும் எண்ணிக்கையிலும் அதிகமாக்கினான். இன்று எங்களுக்குச் சமமாக யார் இருக்கின்றனர்? பதவியில் எங்களுக்கு இணையாக யாராவது இருப்பார்களானால், அவர்கள் தங்கள் பெருமையை எடுத்துக் கூறலாம்." என்று கூறி அமர்ந்தார்.

அதற்குப் பெருமானார் அவர்கள் தாபிதுப்னு கைஸ் அவர்களை நோக்கி; "எழுந்து அந்த மனிதரின் உரைக்கு பதில் கூறும்" என்று சொன்னார்கள்.

தாபித் எழுந்து, "வானங்களையும் பூமியையும் படைத்த ஆண்டவனுக்கே புகழ் எல்லாம் உரித்தானது... அவன் நமக்கு அரசை அருளினான். தன் படைப்பில் சிறந்தவர்களைத் தேர்ந்து தன் தூதராக்கினான். அவர்கள் உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரிலும் அவர்கள் சத்திய வாக்கும், ஒழுக்கமும்