பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

3. விளையாட்டிலே விருப்பம் இல்லை

பெருமானார் அவர்கள் இளம்பருவத்தில், தனித்திருந்து சிந்தனையிலே ஆழ்ந்து விடுவார்கள். மற்றப் பிள்ளைகளைப் போல் விளையாட்டுகளிலே நாட்டம் கொள்வதில்லை.

பெருமானார் அவர்களின் இளம்பருவத் தோழர்கள் ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்தார்கள்.

“மனிதன் மேலான காரியங்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறானே தவிர, விளையாட்டுக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப் படவில்லை” என்று கூறி மறுத்து விட்டார்கள்.

4. கல்வி பயிலாமல் அறிவுக்கூர்மை

இளமையிலே அறிவுக்கூர்மையும், சிறந்த ஆராய்ச்சியும் மிளிர்வதற்கான அறிகுறிகள் பெருமானார் அவர்களிடம் நிரம்பக் காணப்பட்டன. எந்தக் கல்விக்கூடத்திலோ அல்லது எந்தத் தனி ஆசிரியரிடத்திலோ பெருமானார் கல்வி பயின்றதில்லை.

இதனாலேயே பெருமானார் அவர்களுக்குக் கல்வி கற்காதவர்' (உம்மி) என்ற பெயர் உண்டாயிற்று.