பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வைத்து, பிறகு தாங்களும் "மேலான தோழனான ஆண்டவனிடம்" போய்ச் சேர்ந்தார்கள்.

பெருமானார் அவர்கள், ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை இவ்வுலகில் தோன்றினார்கள். அதே மாதம், அதே தேதி, அறுபத்து மூன்றாவது வயதில் இம்மண்ணுலகை விட்டு, விண்ணுலகுக்குச் சென்றார்கள்.

பரிசுத்த கஃபாவையும், மனித வர்கக்ததை நல்வழிப்படுத்துவதற்காக, இவ்வுலகில் தோன்றிய பெருமானார் அவர்களின் அடக்கத்தலத்தையும் காணும் பாக்கியத்தை ஆண்டவன் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அருள்வானாக!

ஒவ்வொரு முஸ்லிமும் பெருமானார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்க ஆண்டவன் அருள்புரிவானாக!