பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


உ, ஊ, ஒ, ஓ, ஒள - இவ்வைந்து எழுத்துக்களை யும் உச்சரித்துப் பார், இவை வாய் திறத்தலுடனே உதடுகளின் குவிதலாகிய முயற்சியால் பிறத்தலை அறியலாம். to 'உ, ஊ, ஒ, ஒ. ஒள என்ற ஐந்து உயிரும் வாய் திறத்தலுடனே உதடுகளின் குவிதலாகிய முயற்சியால் பிறக்கும்.' குத்திரம்: 'உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே.' மெய்யெழுத்து: க், ங் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே அடிநாக்கு மேல்வாயடியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறத்தலை அறியலாம். “3, ங், என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே அடிநாக்கு மேல்வாயடியைச் சேர்த லாகிய முயற்சியால் பிறக்கும்.” ச், ஞ்-இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே நடு நாக்கு மேல் வாயின் நடுப் பகுதியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறத்தலையறியலாம். - . . . . . 'ச, ளு என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே நடுநாக்கு மேல் வாயின் நடுப்பகுதியைச் சேர்தலாகிய முயற்சியால் பிறக்கும்.”