பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


11. உவமை உருவக மாற்றம் தாமரை போன்ற முகம் - இதில் தாமரை என்பது உவமானம். முகம் என்பது உவமேயம். போன்ற என்பது உவம உருபு. வட்ட வடிவம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை. இவ்வாறு வருவது உவமையணி. தாமரையாகிய முகம்-இது தாமரையே முகம், முகமே தாமரை என்று பொருட்பட்டு நிற்கிறது. ஆகிய என்ற உருவக உருபு வந்தது. முகத்தாமரை - இதில் உவமேயம் முன்னும் உவ மானம் பின்னும் நிற்கின்றது. இவ்வாறு வருவதும் உருவகமாகும். தாமரை முகம்-இது முறையே தாமரைமுகம், முகத் தாமரை என்று கூறப்படும். இவற்றில் உ ரு பு. க ள் தொக்கன. அப்பொழுது இவைகள் தொகை என்று வழங்கப்படும். "உவமையை உருவகமாக மாற்றும்பொழுது போல, புரைய என்ற உவம உருபுகளை நீக்கி விட்டு ஆகிய, ஆகும், ஆக முதலிய உருவக உருபுகளில் ஒன்றைச் சேர்க்க உவமை உருவகமாக அமையும். உவமேயத்தை முன்னும் உவமானத்தைப் பின்னுமாகக் கொண்டால் அப்பொழுதும் அது உருவகமாகவே அமையும்.” 12. வல்லெழுத்து மிகுமிடங்களும் மிகா இடங்களும் 1. வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் எய் - கொற்ரு - எய்க் கொற்ற நட - கொற்ரு - நடக்கொற்ற