பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


14. சொற்கள் இடம் விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதலும் எழுதுவோர் தான் நினைத்த பொருள் தெளிவாக விளங்குமாறு சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுது தல் வேண்டும். இல்லையாளுல் பொருள் கெட்டு விடும். தலைவிதி வசம் - இதனை தலை விதி வசம், தலைவி. திவசம் என்று பிரித்து எழுதுகின்ற பொழுது எவ்வா றெல்லாம் இது பொருள் படுகின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். பரிவால் என்ற சொல் அன்பில்ை என்று பொருள்படும். அதையே பரி, வால் என்று பிரித்து எழுதினுல் குதிரையின் வால் என்று பொருள் படும்.