பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


பொழுது இறுதியிலுள்ள மகர மெய் கெட்டு உயிரீற்றுச் சொற்கள் போலப் புணர்வனவும், வல்லினம் வந்தால் கெடாமல் அதற்கினமான மெல்லெழுத்தாகத் திரியும்.” குத்திரம்: == 'மவ்வீறு ஒற்று ஒழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.' தேன்: == அல்வழி வேற்றுமை தேன்-கடிது -தேன்கடிது தேன் +செம்மை தேன்செம்மை இவற்றில் வலி வருமொழி யாயிற்று. தேன்--மாண்டது--தேன்மாண்டது தேன் + மாட்சி தேன் மாட்சி இவற்றில் மெலி வருமொழியாயிற்று. தேன்-யாது-தேன்யாது தேன்-யாப்பு தேன் யாப்பு இவற்றில் இடை வருமொழியாயிற்று. மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முத லில் மூவின மெய்வர தேன்’ என்னுஞ் சொல் இயல் பாயிற்று. தேன்+மொழி-தேன்மொழி தேன்+மலர்-தேன்மலர் தேமொழி தேமலர் } இவற்றில் மெல்லினம் வருமொழி முதலாயிற்று, மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முத லில் மெல்லினம் வர தேன்’ என்னுஞ் சொல் இயல்பும், இறுதியழிவும் பெற்றது.