பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


இவற்றிலுள்ள 'பசு, பசுக்கள்' என்ற சொற்கள் தன்மையாலும், முன்னிலையாலும் பேசப்படுஞ் சொற்களாம். இவ்வாறு இவர்களது பேச்சுப் படர்ந்து சென்று, மூன்றாவது பொருளைக் குறிப்பதே பர்க்கையாம். 'பசு' என்பது படர்க்கை ஒருமை. பசுக்கள்' என்பது படர்க்கைப் பன்மை.

"தன்மையையும், முன்னிலையையும் உணர்த்தாது மூன்றாவதொரு பொருளை உணர்த்துவதே படர்க்கையாம். இதிலும் ஒருமை, பன்மை என்ற வேறுபாடு உண்டு. அவன், அவள், அது என்பன படர்க்கைப் ஒருமைச் சொற்களாம். அவர்கள், அவை என்பன படர்க்கைப் பன்மைச் சொற்களாம்."

"தன்மையிடம், முன்னிலையிடம், படர்க்கையிடம் என்று இடம் மூன்று வகைப்படும். இவையே மூவிடம் என வழங்கப்பெறும்.”

5. மூவிடம்-பெயர், வினைகள்

நான் பேசினேன்-இதில் 'நான்’ என்பது பெயர்ச்சொல். 'பேசினேன்’ என்பது வினைச்சொல், நான் என்ற பெயர்ச்சொல் 'நான் பேசினேன்’ என்ற முற்றுச் சொற்றொடரில் எழுவாயாக வந்தி ருக்கிறது. அதுபோல 'பேசினேன்’ என்ற வினைச்சொல் அதன் பயனிலையாக வந்திருக்கிறது. இவை போல எழுவாயும் பயனிலையும் ஒத்து ஒரு வாக்கியத்தில் வரவேண்டும்