பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


வருவதுண்டு. அதுபோல பயனிலை வராது ஆகவே பயனிலையே ஒரு வாக்கியத்தின் முக்கிய உறுப்பாம்.


செயப்படுபொருள்:-

நான் சென்றேன் - இவ் வாக்கியத்தில் பயனிலை ‘சென்றேன்’ என்பதாகும். அதனுடன் 'எதை' என்று கேள். அதற்குப் பதில் இல்லை.


அவன் சோற்றைத் தின்றான் - இவ் வாக்கியத்தில் 'தின்றான்’ என்பது பயனிலையாகும். அதனுடன் எதை என்று கேள்வி கேள். 'எதைத் தின்றான்?' அதற்குப் பதில் வருகிறதா? ஆம். 'சோற்றை' என்பதே பதில் ஆகும். அதுவே செயப்படு பொருளாம். சோற்றைத் தின்றதே கருத்தாவால் செய்யப் பட்டதாம்.


"பயனிலையோடு, எதை அல்லது யாரை என்றவைகளில் பொருத்தமான தொன்றை சேர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். வரும் விடையே செயப்படு பொருளாகும்".


"எழுவாயும் பயனிலையும் ஒரு வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களாம். அவைகள் இல்லாது வாக்கியம் அமைவது இல்லை. அவற்றுள்ளும் பயனிலையே மிக முக்கியமாம். ஏனென்றால் சில சமயங்களில் எழுவாய் மறைந்து வருதல் உண்டு. சில வாக்கியங்களில் செயப்படுபொருள் இருக்கும். எல்லா வாக்கியங்களிலும் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை".