பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


குறிப்பு:- மக்களுள் மாக்கள் என்று அழைக்கப்படுகின்ற பகுத்தறிவு இல்லாதவரும் அஃறிணையின் பாற்படுவர். மக்களின் உயிரும், உடம்பும் தனித் தனியே கூறப்படும் பொழுது அவை அஃறிணையாம்.

தாய், தந்தை, தான், தாம், எல்லாம்-என்பன இரு திணைக்கும் பொதுவான பெயர்களாம்.


சூத்திரம்:-"மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை."

 

பயிற்சி

1திணை என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?
2உயர்திணை என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்கு.
3அஃறிணை என்றால் என்ன? உதாரணம் கொடு.
4 மாக்களை ஒத்த மக்களும் உண்டு, இந்திரன் சிறந்தவன். சந்திரன் நல்லவன். மந்தரம் வென்றவன். மாடுகள் மேய்கின்றன. சிங்கம் மலையில் மோதியது. மரங்கள் வளர்கின்றன. கொடி படர்கிறது. அம்மியும் அடித்தால் நகரும் - இவற்றில் உள்ள உயர்திணை அஃறிணைப் பெயர்களைத் தனித்தனியே எடுத்து எழுது.